எதை வளர்த்தோம் எதை அறுத்தோம்
பயிர் வளர்த்தோம் தினம் நினைத்தோம்
வளர்ந்த பின்னே எதை அறுத்தோம்
தீயினுக்கே நாம் உயிர் கொடுத்தோம்
தீண்டியதும் தான் அறிவு பெற்றோம் !
சகுனியின் புகழ்ச்சிகள் என்பதே..
சூழ்ச்சிகள் என்றும் தெரியவில்லையே
அகந்தையின் மறு வடிவமே
பொறாமையின் துணை கொள்ளுமே
உண்மையை உணர்ந்து விலகிட
உள்ளமும் அமைதி கொள்ளுமே !
வானத்தில் கோட்டைகள் கட்டி நிற்போம்
நீர்க் குமிழிகள் மீதே .. நாம் நடந்தோம்
புல்லாய் நம்மை என்றும் மதித்திருப்பார்
அவர் கால்களில் நசுக்கி மிதித்திருப்பார்
எத்தனை வஞ்சம் அவர் சேர்த்திருப்பார்
அத்தனை நஞ்சும் பேச்சில் வைப்பார்
அறிவின் மயக்கம் இன்று தீரட்டுமே..
நடிப்பவர் முகமூடி நன்று கிழியட்டுமே..!
இந்நாளில் நம் உரிமை ஏதுமில்லை
இருப்பவற்கே நீதியும் துணைஇங்கே!
எதை வளர்த்தோம்.. எதை அறுத்தோம்
அதை உணர்வோம் ..நலம் பெறுவோம் !