மழை தேவனா மன்மதன் தூதனா
சில்லென்று மழை துளி,
துள்ளியே நானும் அருகில் அமர,
செல்லமாய் கதைகள் பல தொடர,
சிறிய புன்னகை உன்னில் பரவ!
மெல்ல ஸ்பரிசங்கள் மேலும் நெருங்க,
சிணுங்கலுடன் நானும் நாணம் பூண,
அல்லும் காதல் உன்னை கவ்வ,
வெல்லும் பாசாங்கில் நானும் விலக!
வேகமாய் அதி வேகமாய் கைகள் விலங்கிட,
மின்னல் வழி மின்சாரம் பாய,
பார்வை வழி பரவச மொழிகள் பகிர,
இடி முழக்கத்தில் மனதின் ஓசை கேட்கப்பட!
மண்ணுடன் மனங்களும் குளிர்ந்தது,
விளைச்சலுடன் விழைவிற்கும் விடை கிட்டியதால்!