மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் போட்டி கவிதை
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம் !
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும் !
இரக்கம் தொலைந்து !
அன்பை மறந்து !
ஆங்கோர் விலங்கு
அலைகிறது !
பணப்பசிக்கு
பலியாகிறது !
மானம் மரியாதை !
சுயமரியாதை
கெட்டவன் இங்கே
தலைவன் !
சொம்பு அடிப்பவன்
குபேரன் !
பட்டு சட்டை
போட்டு பச்சை
பொய் உரைப்பார்!
ஏழை என்றால்
நெஞ்சு நிமிர்த்தி
விறைப்பார்!
பகல் திருட்டு
செய்வோருக்கு
விடுதலை !
விலைபோகிறது !
பணம் முன்னே
தண்டனைகள்
விலைமாது ஆகிறது !
நாணயம் தவறி
நயவஞ்சகம்
செய்வோருக்கு
நாற்காலிகள்
தவம் புரிவதில்லை !
கால் இருந்தும்
ஊனம் என
மாக்களுக்கு
தெரிவதில்லை !
வீதிகொரு கட்சி !
சாதிகொரு கட்சி !
இன்று !
நீதிக்கட்சி
கொன்றுவிட்டு
வந்த திராவிடம்
இதுவா ?
பட்டாள வீரன்
என இருந்த
பழந்தமிழன்
முட்டாளாய் போனது
ஏன்?
இலவசங்கள்
வாங்கிகொண்டு
அறிவை அடகுவைத்தோம்!
படகு போன பின்னே !
துடுப்பு எதற்கு!
எடுப்பார் கைபிள்ளையோ
ஈன தமிழன் ?
தன்மான தமிழன்
எங்கே உள்ளான்?
தேட வேண்டும் !
எல்லோர்க்கும்
தேடல் வேண்டும் !
தன்மான
தமிழனின்
முகவரி கேட்டு !
விரைவில்
வரக்கூடும்
புதிய தலைமுறையில்
விளம்பரங்கள் !
அதுவரை
மானம்கெட்ட
மக்களுக்கு!
மரியாதையுடன்
கண்ணீர் அஞ்சலி !