காதல் போயின்-ரகு

பெருமழை
என்னுள் பொழிகிறது
உன் வரவின் காத்திருப்பில்

ஒரு மரம்
உதிர் இலைகள்
சில்வண்டொன்றின் ரீங்காரம்
உடன் சிறு கவிதையும்

கிளை
மறைவிலிருந்த
இரு அணில்கள்
ஏதோ கிசுகிசுக்கின்றன
உன் நினைவில் முனுமுனுக்கும்
என் கவிதை பற்றி

சிதறிய நிழலில்
உடைந்து கிடக்கும்
பெருங்கிளை மீதிற்
சற்று அமர்கிறேன்

இரு கொக்குகளில்
ஒன்றின் கால் ஊனம்
செம்பூத்தின் பெருஞ்சிறகு ஒன்று உதிர்வு
பறக்க இயலா குஞ்சுக் காகம்
வயோதிக ஓணான்
தெருச் சண்டையில்
தஞ்சமடைந்த தெருநாய்

உயிர்த்த வலியில்
மணித்துளிகள் சிதறுகின்றன

ஒன்றும் அவசரமில்லை
அன்பே
பொறுத்து வா

தனிமைக்கானத் தவிப்பில்லை
என்னிடத்தில்....!

எழுதியவர் : சுஜய் ரகு (14-May-15, 6:00 pm)
பார்வை : 105

மேலே