என் அன்னைக்கு
"நிறைகுடம் தழும்பாது" - நிதர்சனமான
பொய்க்கூற்று, நித்திரையில் நினைவற்ற
மனிதனின் உயிரற்ற பொய்க்கூற்று...
தாயைப்பார், கூற்று பொய்யாகும்.
உலக மெய்களின் மெய்
உருவம், இவள் - உலகின்
தவம் நாம், அவள்
வடித்த மெய் உருக்கள்...
அவள் இன்பம்
அவள் துன்பம்
இரண்டும் ஒன்று
அவள் மக்கள்
முலையமுதுண்ணு கையில் முனகலிலே
மட்டற்ற மகிழ்ச்சி கொள்வாள்
தவழ்ந்து நான் நடக்கையிலே
நிழல்போல எனை தொடர்வாள்...
மழலை மொழியின் பொய்வார்த்தைகளை
ரசித்து உறக்க சிரிப்பாள்...
நான் வளர நித்தம்
அமுதூட்டி சீராட்டி வளர்த்தாள்...
நான் சிரிக்க இவள் சிரிப்பாள்!!!
நான் சிரிக்க நிதம் நினைப்பாள்!!!
அடிவயிற்றில் இயற்கை அமிலம்
சுரக்க, நானலற, துடிதுடித்திடுவாள்...
ஓராயிரம்முறை முட்டி விளையாடினும்
பொய்யாய் ஆ'வெனில் அலறிடுவாள்!
பட்டமெத்துனை பெற்றிடினும் புரம்
கூறிட, கண்களாள் எறித்திடுவாள்...
விட்டு புறம் சென்றிட
தீயில் விழுந்த புழுவாவாள்...
நான் முகம் சுழிக்க எண்ணாதவள்!!!
நான் முகம் வாட விடாதவள்!!!
தாயே, மலர்மேல் பனிபோல
எத்துனை சுகமோ உன்மடி,
மண்ணில் பட்டு சிதறிய
பனித்துளியானேன் உனை பிரிகையிலே...
கடவுள் இல்லையென நான்
இனியும் எப்படி உறைப்பேன்?
நிதம் நித்தம் கண்முன்னே
கை வீசி நடக்கையிலே...
என் உலகின் அழகிய
பெண்ணே, எனை சுமையென
நொடியேனும் என்னாத உயர்ந்தவளே!!
என் அன்னையே, சமர்ப்பணம்...