தோழி
நானும் என் தோழியும் பேசுகையில்
எனக்கென கவிதை சொல்
நவின் என்றாள்....
கவிதைக்கே கவிதையா என்றேன்
புன்னகைத்தாள்.......
நம்பிட்டியா???என்றேன்
அதற்கும் புன்னகை தான்
வானம் அழகு.
அது பூத்த
நிலவும் அழகு
நிலவு தூவிய
விண்மீனும் அழகு...
அது வீசும் ஒளியும் அழகு
இவற்றை
விட
ஆயிரம்
அழகு
நட்பு
அது சிந்திய மழைத்துளி நீ
என்றேன்.....
ம்ம்ம் என்றாள்.....
கண்ணதாசன் உன்னை கண்டிருந்தால்...
நிச்சயம் கவிதை சொல்லி இருப்பார்...
அவர் சொல்லி இருந்தால்
என்னிடம் நிச்சயம் வாங்கி இருப்பார்
யார் அவன்???
என் தோழியை வர்ணிக்க...என்றேன்
இந்த முறை முறைத்தாள்,....
விட்டு கொடுப்பதே நட்பு என்றேன்....
இல்லை இல்லை விட்டு விடாமல் இருப்பதே நட்பு என்றாள் அவள்....
அதுவும் சரி தானே...
சரி சரி என்ன சாப்பாடு என்றேன்....
சிரித்தாள்.....ஓ தயிர் சாதமாம்....
முறைத்தாள் அது....கார குழம்பு.....
வா டி சாப்பிடலாம் என்றேன்....
முதலில் கவிதை என்றாள்....
மூன்று வருடம் ஆகிறது,....இன்னும் அவளுக்கான கவிதையை யோசிக்கிறேன்
(12ஆம் வகுப்பில் நிஜமாக என் வாழ்வில் நடந்தது... எனக்கு தெரிந்த நடையில் எழுதி இருக்கிறேன்...தவறு இருந்தால் மன்னிக்கவும்....என் தோழிஅவள் சிர்ப்பிற்கே உரித்தான பெயர் கொண்டவள் முத்துச்செல்வி....)