தங்கக் கொடி எங்கடி
தங்கக் கொடி எங்கடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க தானே பாத்தேன்.
என்னம்மா சொல்லற? எங்க வீடல தங்கக் கொடி எதுவும் இல்லையே!
நான் எதுவும் கொண்டு வரல.ஆனா தங்கக் கொடியை வரவேற்பு அறையிலெ தான் பாத்தேன்.
என்னம்மா கொழப்பற?
நா ஒண்ணும் கொழப்பலிடி. ஒங் கடைசி பொண்ணு பேரென்ன?
என்னம்மா, தெரியாத மாதிரி கேக்கற? சொர்ணலதா.
நான் அவளத்தாண்டி கேட்டேன்.
சொர்ணலதா -ன்னா தங்கக் கொடி -னனு அர்த்தம்.
மன்னிச்சுக்கம்மா. நாங்க அந்தப் பேரோட அர்த்தம் தெரியாமலெ அந்த இந்திப் பேர அவளுக்கு வச்சுட்டோம்