காதலா சமூகமா

உள்ளுக்குள் ஓர் சலசலப்பு
எனக்கும் எனக்குமாய் ஒர் கைகலப்பு
மோதி வெற்றிக் கொண்டது எது...?

நாட்டாமைகளுக்கா பஞ்சம்
பதிவுக்கு பதிவு வீசுகிறதே
அவர்கள் விட்டுச் சென்ற
வெற்றிலை வாசம்

என்னுள் ஒருவன்
வர்ணிப்புகளை அறியாதவன்
மேகம் பூமி மழை தென்றல்
என சுகமான வார்த்தை பேசி
சுகமளிக்க இயலாதவன்
கோபக்காரன்
குற்றம் மட்டும் காணுபவன்
சமூகம் சமூகமென
கிறுக்கி யவர் ஈர்ப்பும் அற்றவன்

குப்பை போல்
குறைகளை அடுக்கி
சமூகத்தை சாடி
நல்லவைகளை நாடி
வசதியற்று கிடப்பான்
விருப்பங்கள் அற்று கிடப்பான்

எனக்குள் மற்றொருவன்
திறமைசாலி
நெய் ஒழுகும் வார்த்தை பேசி
காதல் வலை எங்கும் வீசி
கற்பனையில் வீடுகட்டி
உருகி உருகி கவி வடிப்பான்
காடு மலை அருவி என
வார்த்தெடுத்த வார்த்தைகளால்
காதல் மழை வீசிடுவான்
பலரின் மனம் கவர்ந்திடுவான்
விருப்பங்கள் அதிகம்

இங்கு தானே சலசலப்பு
எவர் இங்கு பெரியவரோ
எவர் செய்கையில் சிறந்தவரோ
என்பதிலே குழப்பம்
விடிவு தந்தால் சிறக்கும்

எழுதியவர் : கவியரசன் (15-May-15, 11:44 am)
பார்வை : 64

மேலே