வாடகை வீடு
வாடகை வீடு
ஆணி அடிக்கக் கூடாது
அங்கங்கே எதையும்
மாட்டி வைக்கக் கூடாது
படங்கள் தொங்கலாமா?
கூடவே கூடாது
வாடகைத் தேதி
மறக்கக் கூடாது
சின்னதாய்க் காய்கறித் தோட்டம்
கனவு காணக் கூடாது
பல ஆண்டு வர்ணம்
சிறிதும் சிதையக் கூடாது
அது கூடாது
இது கூடாது
மனது நினைத்தது?
நாம் இங்கே
வந்திருக்கக் கூடாது!!!