சின்னமலை முதல் சீனாய் மலை வரை

இயேசுவின் சீடர் வாழ்ந்தது சின்னமலை
பிதாவின் சீடர் வாழ்ந்தது சீனாய் மலை

சீரில்லா பொருளாதாரம் - என்
சிந்தனை முழுதும் இறைவனின் ஆதாரம்

இல்லத்தோடு இணைந்து விமானத்தில் பறந்து
இறங்கினேன் மஸ்கட் மீண்டும் பறந்து இறங்கினேன் ஓமன்

விந்தையென தெரிந்தது புது விதமாய் இருந்தது
எந்தையொன் வாழ்ந்த இடங்கள் காண இன்பம் சுரந்தது

பேருந்தில் ஏறியே பாரெங்கும் பார்த்து ரசித்து
ஜோர்டானின் விடுதி ஒன்றினில் இளைப்பாறினேன்

காலை எழுந்து கால்அளவு உணவு உண்டு
எழுதுகோல் பேப்பராய் ஏறினேன் பேருந்தில்

வழிநடத்திய வழிகாட்டி - அவர்
வழி நடக்க என் விழி காட்டி இன்பம் கூட்டியது

விவில்ய வார்த்தைகளின் நிஜத்தின் முன்னால் நான்
வியந்து பயந்து உருகி ஓடாகினேன் ஆச்சிரியத்தால்

கீ.மூ .கீ .பி .யின் வரலாற்று இடங்கள் -இனி என்
வாழ்க்கையினை வழி நடத்தும் ஆன்மீகத்தின் நிஜங்கள்

புதிய கோலோன்றுக்குள் புகுந்து புதுமை அடைந்த
இன்பம் சுவைத்து என் அறிவினை கூர்மையாக்கினேன்

காலை கதிரோன் மாலை நிலாவின் மாயங்கள் கண்டு
மதி மயங்கி ஆன்மீக போதையில் தள்ளாடினேன்

நேபோ மலையின் அழகையும் பள்ளத்தாக்கையும் கண்டு
ஆசிரியமூட்டும் பார்வையால் அல்லாடினேன்

ஆன்மிகம் கூர்மையானது அன்பு மேலோங்கியது
நன்மை மட்டுமே வாழ்வு மற்றதெல்லாம் மாயையானது - இனி

புதிய புத்தகம் திறந்து புண்ணிய பூமியில் பிறந்த - என்
எண்ணங்களையும் இன்பங்களையும் பதிக்கும்

** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ** * * * ( தொடரும் ...

எழுதியவர் : சி .எம் .ஜேசு (15-May-15, 11:42 am)
பார்வை : 107

மேலே