எழுதியே தீர வேண்டும்

எதையோ ஒன்றை
எழுதியே தீர வேண்டும்
இத்தளத்தில்//்
எண்ணம் மட்டுமே பதிந்தால்
என்னையே மறந்திடுவார்
என் செய்ய....?
வார்த்தைகள் மட்டுமல்ல
எழுத்துக்களும்
ஒத்துழையாமை புரிகிறது
ஒதுங்கியே நிற்கிறது...//
பரிசுக்காக இல்லைதான்
பார்வைக்கேனும்
எழுதிட வேண்டுமே...!//
இணைய இணைப்பு
வீணாவதாய் என் நினைப்பு....//
துரியோதணாதிகளாய்
சதி செய்கிறது
கவிதையின் கரு....//
வராத கவிதையை
வலிந்து அழைக்கின்றேன்
வம்புக்கு இழுக்கின்றேன்...//
உரை நடைக்கே
இத்தனை உளறல் என்றால்
கவிதைக்கு....?//
அடப் போங்கடா
நீங்களும் உங்க கவிதையும்
எழுதிக் கிறுக்கியதை
அப்பாடா....பதிந்து விட்டேன்
எந்த நக்கீரர்
குற்றம் காண வந்திடுவார்?
அதையும் தான் பார்த்திடுவோம்...!







(இந்த வாரா கோட்டா ஓவர்)

எழுதியவர் : சித்ரா ராஜ் (16-May-15, 11:12 am)
பார்வை : 95

மேலே