என் சின்ன சின்ன கிறுக்கல்கள்

ஆற்று மணல் திருடி கட்டிய
வீட்டின் வரவேற்பறையில்
தொட்டி நீரும் ,. கூழாங்கற்களும்
கொஞ்சம் மீன்களும்
ஆற்றின் நினைவாக ......

*****************************************************
சுரண்டப்பட்ட
மணல்
உயர்ந்து நிற்கிறது
வானுயர்ந்த கட்டிடங்களாக
***************************************************

ஆறுகளில் பயணித்துப் போக
இப்போது
லாரிகளில் பயணிக்கிறது
மணல் !!!!

**********************************************

எழுதியவர் : (16-May-15, 3:07 pm)
பார்வை : 190

மேலே