சான்று சொல்ல

காதல் ஒரு புது உறவு
புதிய உள்ளம் இரண்டு
புதிய அன்பு கொண்டு
எண்ணங்கள் பரிமாறி
புரிந்து கொண்ட உணர்வுகளில்
சிறகடிக்கும்
எவருக்கும் தெரிந்திடாமல்
படபடக்கும் உணர்வே காதல்
பூவாட்டம் வண்டாட்டம்
வண்ணத்துப் பூச்சியாட்டம்
என்னென ஆசைகளில்
எட்டுத் திக்கும் பறந்து செல்லும்
எண்ணங்களில் எழுகின்ற
புனிதமான அலையே காதல் அலை
இந்த அலை ஓய்வதில்லை
இதில் கள்ளம் இல்லை காமம் இல்லை
புனிதமான அன்பே இதயங்களின் அலையாக ,
இதுதான் காதலின் அர்த்தம்
இத்தகைய காதல் தான் இறுதி வரை
உறுதி கொள்ளும் புரிந்து கொள்ளும்
திருமணத்தின் ஆயுள் எல்லாம்
இக் காதல் நிலைத்து நிற்கும்
ஆண்டவன் போடுகின்ற அன்பு என்ற முடிச்சு
ஆளும் வரை வாழும் வரை
ஆட்சி செய்யும் காதலரை
இக் காதல் வேண்டும் என்றே கேட்கின்றோம்
தெரிந்து தான் வென்றிடுங்கள் காதலரே
உங்கள் காதலைத் தான் சான்று சொல்ல

எழுதியவர் : பாத்திமா மலர் (16-May-15, 2:05 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : saandru solla
பார்வை : 102

மேலே