அன்புள்ள அன்னைக்கு

அன்பென்னும் ஆயுதம் கொண்டு
ஆண்டவனின் அருள் வென்று
இன்முகச் சிரிப்போடு - என்னை
ஈன்றேடுத்தாய் அன்னையே !

உண்மைதனை போதித்து
ஊரார்க்கு உதவி செய்து
எளிமையாய் வாழ்ந்து - என்னை
ஏற்றமடைய வைத்தாய் எந்தாயே !

ஐயமுத உணவு தந்து
ஒன்பது கோள்களாய் இருந்து
ஓங்காரப் பிரணவமாய் - என்
ஔடதமாய் விளங்கும் தாயே !

சத்தியத் திருவுருவே !
உன் தாள் பணிகிறேன் !

- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (17-May-15, 11:18 am)
Tanglish : anbulla annaikku
பார்வை : 337

மேலே