அம்மா-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

பிறப்புறுப்பை கிழித்து உதிரமுலாம் பூசி
பத்து திங்களிலே ஜீவன் வெளிவர
'அய்யோ அம்மா'என்று வேதனையால் துடித்து
கடவுளிடம் சேயையும் எமனிடம் தன்னையும்
அடகு வைத்த கண்கண்ட தெய்வம் ஆத்தா.
சேய்யில் மார்பை பற்றி பிடித்தேன்.
குழந்தையில் மடியை நாடி நின்றேன்.
வளர்ந்ததும் பாதத்தில் கிடந்து
உனக்கு பணிவிடை செய்தாலும்
உன் பாசத்திற்கு ஈடாகுமா?
நீ எனக்கு அன்னமூட்டுவதனால் தான் அம்மா
அதற்கு நிலாச்சோறு என்று பெயரா?
நான் அழுதாலும் நீ அழுவாய்
சிரித்தாலும் உன் கண்கள் ஆனந்த நீரை ஊற்றெடுக்கும்.
உன் தூக்கத்தை தியாகம் செய்து
என் விழிகளினுள் புகுத்தினாய்.
'ஆராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆருயிரே'
தாலாட்டுப்பாட்டு செவிகளினுள் மறவாத இசை ஊற்று
உலகில் பிறந்த மாந்தனெல்லம்
பொன்னும் பொருளும் தேடுகிறான்
கற்பகத்தருவை மூலையில் வைத்துக்கொண்டு....,
ஒருநாள் வாழும் மின்மினி பூச்சிகளும்
தாயோடு இறப்பதைப்போல நானும்
என் தாய் இறக்கையில் உயிர்நீர்த்து
மண்ணறையில் தாய் மடியில் தூங்க வேண்டும்