மே --18

உயிர் பெற்ற தமிழினம்
உடல் கருகி போன நாள்
ஓங்கிய தமிழ் நாதம்
ஓலமாய் போன நாள்

மீசை நரைத்த முதியவர்கள்
ஆசை வளர்த்த ஆடவர்கள்
கண்சிமிட்டிய காதலர்கள்
கல்வி தேடிய மாணவர்கள்
பேச தொடங்கிய மழலைகள்
பேணிக்காத்த விலங்குகள் என
கொத்தணிக்குண்டதுவில் கருகிய
கடைசி நாள்

புள்ளி விபர கணக்கின்றி
புகைந்து போன எம் சாவை
சொல்லி அழைத்து நீதி பெற
நாதி என்று ஏதும் உண்டோ ??????

வானத்தின் முடிவு தேடி
ஓடிடும் வாழ்க்கையாய்
தேடுகிறோம் நீதி
அழித்தவர்கள் யாரோ ????? .

எழுதியவர் : இணுவை லெனின் (18-May-15, 4:14 am)
பார்வை : 131

மேலே