யாருக்கு யார் அடிமை -ரகு
நுரைத்த மதுவை
ஒரு விரலில் தொட்டுத்
துச்சமென எறிகிறேன்
"உனக்கு நான் அடிமையா" என்று
பருகிய பின்
புகைத்த நெருப்பைக் காலிட்டு
மிதிக்கிறேன்
நெருப்பைகேள் என் வீரம் யாதென
தள்ளாடி நடந்தும்
தெருக்களில் கிடந்தும்
போதை நீங்கலாக
என் பிடியில் சிக்கிய
மதுவைத் தளர்த்துகிறேன்
புரியாமல் புலம்பி அரற்றுகிற
மனைவிக்கும் அவள் கக்கத்தில்
கதறும் குழந்தைக்கும்
எப்படிப் புரிய வைப்பது
மதுவே எனக்கு அடிமையென்று..........?!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
