உடல்கள் அல்ல உயிர்கள்
உடல்கள்... அல்ல.. உயிர்கள்...
மொழியின் -
தொன்மையும்
தூய்மையும்
துலங்கிடும்
ஓர் இனம்...!
தன்னின -
வளமையும்
வலிமையும்
வாய்மையும்
ஏந்தியே.....
வலம் வரும்
பேரினம்...!
தன் -
உள்ளத்தில் -
முதிர்ச்சியும்....
உதிரத்தில் -
உணர்ச்சியும்...
சமுதாய -
யெழுச்சியும்...
சங்கல்ப -
கிளர்ச்சியும்...
சங்கமாகிய -
மானுடம்....!
தமிழை விதைத்து -
தமிழை விளைத்து...
தமிழை முகர்ந்து -
தமிழை நுகர்ந்து...
தமிழை அறிந்து -
தமிழை அளந்து...
தமிழை பொழிந்து
தமிழாய் வாழ்ந்து
தமிழுக்காய் வீழ்ந்த
தனித் தமிழீழம்...!
வித்தாய் -
விழுந்தது....
முளைத்து...
எழுந்து....
விழுதாய் விரிந்து
வெற்றியை ஏந்திட...
விழுந்த எருவாய்
இன்று -
எம் மக்களின்
உடல்கள்...
அல்ல...அல்ல..
உயிர்கள்...