வாடகைத்தாய்
வாடகைத்தாய்
=========================================ருத்ரா
செய்தி வந்தது
குழந்தையை பிச்சையெடுக்க
வாடகைக்கு விட்ட தாயும்
வாடகை கொடுத்த தாயும் பற்றி.
வாடகைக்குழந்தைகளும்
வாடகைத்தாய்களும்
இனி நம்
கார்பரேட்டுகளின்
அட்சய பாத்திரங்கள்.
சுதந்திரம் சுதந்திரம் என்று
சுடர் கொளுத்தினோம்
இருப்பினும் இன்று
இந்தியா வாடகைத் தாய் ஆகினாள்.
அன்னிய முதலீட்டாளர்களுக்கு.
"விடுதலை"யை அடமானம் வைத்து
"ஜனநாயக"த்தை
வாடகைக்கு வாங்கியதால் தான்
ஆதிக்கத்தின் அர்த்தம்
நம் தமிழுக்கு
இந்தியாவிலும் புரியவில்லை.
இலங்கையிலும் புரியவில்லை.
============================================