துளிப்பாக்கள் - கே-எஸ்-கலை

உப்பிருந்தும்
குப்பையில் போடுகிறார்கள்
ஏழையின் கண்ணீர் !
==
நன்றியுள்ளவன்
அடிமைப்படுத்தப் படுவான்
நாய்களைப் பாருங்கள் !
==
எலி மருந்து
திருடி தின்றிருந்தது
செத்த எலி !
==
இயற்கை
செழிப்பாக இருக்கிறது
கணினித் திரைகளில் !
==
சமூக நோய்களில்
இரண்டாமிடம் எய்ட்ஸ்க்கு
முதலிடம் காதலுக்கு !
==
வேக வேகமாய்
மரம் அறுக்கிறார்கள்
சவப்பெட்டி செய்ய !
==
முன்பு கல்
இப்போது கள்
இளமையில் !
==
குட் மோர்னிங் டீச்சர்
குட் மோர்னிங் - சிட் டவுன்
தமிழ் பாடம் தொடங்கியது !
==
ஊர்விட்டுப் போன குருவி
திரும்பி வந்து பேசுவதில்லை
வேறு வேறு பாசை !
==
கனவுகளின்
வயிறு நிறையும்
கானல் நீரால் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (19-May-15, 9:06 am)
பார்வை : 237

மேலே