துளித் துளியாய் +2-ரகு
ரேகை பார்த்து
வாழ்வைக் கணிப்போர்களே
வணக்கம் வந்தனம்
உங்களிடமான வேண்டுகோள்
இதுதான்
எந்தெந்த ரேகைகள்
உள்ளக் குழந்தைகள்
நாளை
குற்றம் புரியும் கையேந்தும்
என வகைப் படுத்துங்கள்
அன்றேல்
கைரேகை வைத்துக்
கையெழுத்திடுங்கள்
ரேகைகளுக்கு
அப்பாற்பட்டது
இந்த நாளும் வாழ்வுமென.......!!!