அவை வெறும் கனவுகள் அல்ல

என்
கனவுகளுக்கு உரமிட்டு வளர்க்கிறேன்
நீங்களோ தீயிட்டு கொளுத்துகிறீர்கள்
எரிந்து சாம்பலாக ....
அவை காய்ந்த விறகுகள் அல்ல...
உயிருள்ள விருட்சம்...
எரியாத வேரிலிருந்து
மீண்டும் முளைப்பேன்....
நீங்கள் வெட்டி வீசுவது
உங்கள் கைக்கெட்டிய
என் தளிர்களைத்தான்......
பூமியை பிளந்து மறுபக்கம் எட்டி
ஆகாயம் பற்றிகொண்டிருக்கும்
என் வேரை என்ன செய்வீர்கள்?...
என் கனவுகளை...
ஏழு கட்டல்..........
ஏழுமலை தாண்டி.......
ஆங்கோர் ராஜளியின் கூட்டில் வளர்க்கிறேன்
உங்களின் தீக்கரங்கள் தீண்டவே தீண்டா...
அவை வேதாளம் போன்றவை ....
எந்த விக்ரமாதிதனுக்கும்
சவால் விடும்...
மீண்டும் மீண்டும் ...
மீண்டு தன் கிளை சேரும்....
கண்களை பிடுங்கிவிட்டால்
என் கனவுகள் தீருமென்று
தப்பு கணக்கு போட்டீரோ?...
அவை தொடு வானம்....
நீங்கள் தேட தேட நீளும்...
ஒருபோதும் தொட முடியாது .....
பத்திரமாய் பாதுகாக்கிறேன்....
என் கனவுகளை.....அவை
சிறகு முளைத்து வானேரும்போது
அதன் பிரம்மாண்ட நிழலில்
மூழ்கிபோகும் எரிதணல் சூரியன் ....
அவை வெறும் கனுவுகள் அல்ல....
என் ஜென்மத்தின் தேவை....
என் பிறப்பின் தீர்வை.....