வரம்

ஔவை பாட்டி சொன்னாள்
கூண், குருடு, செவிடின்றி பிறத்தல் அரிது.
அவள் கருத்தில் எனக்கொரு மாற்று கருத்து.
என்னை பொறுத்தவரை..
செவிடாக பிறப்பது ஒரு வரம்.
இவ்வுலகின் சண்டைகள், சச்சரவுகள், கேலி, கிண்டல்கள், போலி போற்றுதல்கள், தூற்றுதல்கள்
இவை எதுவுமே கேட்காத அமைதி நிலை.