விளம்பரம்

தொட்டு கொள்ளவா ஊறுகாய்...
மனதை மயக்கும் பெருங்காயம்..
எண்ணெய், பருப்பு, தேன், அப்பளம்
என சமையலறை விளம்பரம்
அனைத்திலும் நீதான்...
அதுதான் உனக்கு எழுதி தரபடாத உயில் ஆயிற்றே
==================================
பொன்னழகு, பேரழகு உன்னோடு...
தொட்டு தொடரும் பட்டு...
ஏழு நாட்களில் சிவப்பழகு...
உதட்டு சாயம், நகபூச்சு,கண் மை
என எத்தனை , எத்தனை !!!
ஆம். உன்னை நீயே விளம்பரபடுத்த தேவைதான் இவை எல்லாம்!!
================================
இது போகட்டும். ..
இரு பாலரும் பயன்படுத்தும்
சோப்பு, ஷாம்பூ, வாசனை திரவியம்
என அனைத்திலும் நீதான்..
ஆணின் சேவிங் கிரீம் முதல்
ஆடை வரை நீ தேவை...
பெண்ணே...
நீ ஆதிக்கம் செய்யவில்லை!!
நீ விற்கபடுகிறாய்...
உணர்வாயா நீ!!!!!
====================================