மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் - போட்டிக்கவிதை

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்செல்வம் குவியும்

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

மானம் என்னங்க மானம்
அது பறக்கட்டும் ஏறி விமானம்
மனச்சாட்சிக்கு யாருங்க சாட்சி
பணம் மட்டுமே அமைக்குது ஆட்சி

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

ஊழலும் லஞ்சமும் பொதுவுடமை
கையை நீட்டியே வாங்குவது பிறப்புரிமை
நீதியும் நேர்மையும் மண்ணுக்குள்ளே
நிலை நாட்டிட துணிந்திட்டால் வாழ்வேயில்ல..

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

புத்தியை அடகுக்கு வைத்திடுவான்
பண சக்தியால் உலகையே வாங்கிடுவான்
தீதுக்குதுணை நின்று பேரெடுப்பான்
எதிர்த்து கேட்போரை அவமதித்து நாறடிப்பான்

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

கொள்ளையை கொள்கையாய் கொண்டிருப்பான்
இல்லார்க்கு கொடுக்காமல் தின்று தீர்ப்பான்
கோட்டைக்காய் நாட்டையே ஏமாற்றுவான்
இவன் சட்டத்தின் காதிலும் பூச்சுற்றுவான்

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

விபத்தினை கண்டிட்டால் ஒதுங்கிடுவான்
சாலையில் மகளிரும் அவதிப்பட வாய்திறவான்
அடிபட்டோரின் பொருட்களை திருடிடுவான்
ஏனோ பிடிபட்டால் காவல்துறை வருடிடுவான்

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

கெட்டதொழில் செய்தேசதை வளர்த்திடுவான்
பட்டவரே கஷ்டப்பட கண்டுக்க மாட்டான்
முட்டமுட்ட குடித்தேயிவன் விழுந்திருப்பான்
இருண்டபின் உடையிழந்து சாக்கடைவிட் டெழுந்திரிப்பான்

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

நல்லோரை மாட்டிவிட்டு வேடிக்கைபார்ப்பான்
நமக்கென்ன என்றேதன் வேலையைப் பார்ப்பான்
முடிந்தமட்டும் சுருட்டியிவன் செல்வந்தனாவான்
முடியல இனிமேலும் சொல்ல முடிச்சுக்கிறேங்க...

மனுசன் ரொம்ப நல்லவங்க‌
மனசும் ரொம்ப பெருசுங்க‌

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்செல்வம் குவியும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-15, 5:40 pm)
பார்வை : 233

மேலே