கற்றுக்கொள் பிரம்மதேவா

பிரம்ம தேவனே
ஒழிந்த ஒருபோதில்
ஊர்ப்பக்கம் வந்து
எமது
பன்னாட்டுக் கம்பெனிகளின்
படைக்கும் தொழில்நுட்பத்தை
கொஞ்சம் படித்துக்கொண்டு போ
உனது படைப்புகள் பெரும்பாலும்
பிழைகள் தொழில்நுட்ப கோளாறுகள்
மற்றும் வேஸ்டேஜ் நிறைந்ததாகவே
இருக்கிறது