தமிழ்ப் பால்
தமிழ்ப் பால்....!
தாய் -
முலைப்பாலொடு
தமிழ் -
முனைப்பூட்டிய
ஈழத் தாய்...!
தன் -
மழலையை
துறந்து....
மாய்ந் துயில்
கொண்ட...
துரோக -
கொலைக் களம்
தன்னில்...!
அவள் -
குதலை தேடுவது
முலைப்பால்...
அல்ல...
மொழிப் பால்....!
உதிர நெடியில்
உழலும்...
தமிழ்ப் பால்....!