மரணத்தின் வாயில்

தெருவில் விழுந்தோ
தெய்வத்தின் மீது
வழிந்தோ
வாழ்க்கை முடிந்தாலும்
பரவாயில்லை
பசியைப் பார்க்காமலேயே
பயணம் முடிகிறதே
முணுமுணுத்தது
மரணத்தின் வாயில் பால்.....

எழுதியவர் : (20-May-15, 9:16 am)
சேர்த்தது : அறவொளி
Tanglish : maranthin vaayil
பார்வை : 59

மேலே