எழுகின்ற ஒரு இசம்
மார்க்சின் தத்துவத்திற்கு
மூட்டை கட்டியவர்கள்..
முதலாளித்துவத்திற்கு
சாவுமணி அடித்தவனை
வீழ்த்தியதை ..ரசித்தவர்கள்..
வர்க்கப் பிரிவினையால்
வர்க்கப் போராட்டமும்..
முதாளித்துவ ஓட்டைகளை
சொன்னதோடன்றி ஒட்டையினால்
வரும் விளைவுகளையும்
சொல்லியவனை புறந்தள்ளி
பொதுவுடமையை போகச் சொன்னவர்கள்
இன்று உலக மயமாக்கலுக்கும்
செல்வந்தன் செல்வந்தன் ஆவதை ..
வறியவன் இன்னும் வறுமை அடைவதை..
காகிதப் பூ வாசம் கொண்ட
கையறு நிலை கொள்கைகளுக்கும்
சோரம் போய்.. அடிக்கின்றார் பகல் கொள்ளை ..
எழுப்புகின்றார் உலக மக்களை ..
ஒன்றுபட வைக்கின்றார்..
நல்லதுதான்..குழிக்குள் தள்ளப் பட்ட
மார்க்சீயம் தூசு தட்டி எழும்பும்
காலம் வெகு தூரமில்லை!
எழுகையில் வைத்துக் கொள்ளலாம்
அதற்கு பெயராக
ஏதாவது.. புதியதோர் இசம்!