வித்யா

மனம் இல்லா மானம் கெட்டவர்களின்
கரங்களில் அகப்பட்டு சிதைந்த காரிகையே-தம்
இச்சையைதனை கூட்டாகா தீர்த்துக் உனை கொன்றனரே

நீபட்ட வேதனை யார் அறிவார்
பள்ளி சென்ற தன் பிள்ளை
காமுகர்களின் பிடியில் இருப்பதை அறியா உன் குடும்பம் -நீ
வீடு திரும்பி வருவாய் என எதிர்பார்த்த
தாயவளின் உள்ளக் குமறல்களை எவர் போக்குவார்

உனை இழந்த பின்புதான்
விழித்துக் கொள்ளுமா இந் நாடு -அல்ல
பொறுப்பற்ற முறையில் பதில் கூறிய
காவல் துறையினர் உனக்கு நியாயம் வேண்டித் தருவார்களா

யுத்தத்தின் பின் கவனிக்கபடாத- உன்
தீவுப் பிரதேசத்தை இப்பொழுதுதான்
எட்டி பார்க்கிறார்களா அரசியல் வாதிகள் -உன்
இறப்புக்கு நிதி தரும் அரசாங்கம் நீதியை தர மறுக்குமா
உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத எத்தனை பிரதேசங்கள்
பாது காப்பற்ற நிலையில்- உனைப்போன்ற
பல வித்யாவை இழக்க போகின்றது

உன் இழப்பை எத்தனை போராட்டங்களும்
ஈடுசெய்ய முடியாது என்றாலும் -நீ
அனுபவித்த வலியினை உணரவேண்டும் வெறி நாய்கள்
இந்த நாய்களுக்கு சாதகமாக பணம் வாங்கிய சட்டத்தரணிகள்
தாய் வயிற்றில் தானே பிறந்தார்கள்

உனக்கு நேர்ந்த கூட்டு வல்லுறவு -இனி
ஒருபோதும் நடக்காமல் இருக்க
நல் நீதி கிடைத்திடவேண்டும்

இருப்பவர்கள் இருந்தால் -இந்த
பூ கசக்கி எறியப் பட்டு இருக்காது
நம் கைகளே நம் கண்களை குத்துவது போல
தமிழனே தாக்குகிறான் தமிழர்களை

உன் விழிகளால்
நீதி தேவதையின் விழிகளைத் திறந்துவிடு -அவளின்
சுட்டெரிக்கும் பார்வையால் உனை
கொடூரமாய் பங்கு போட்ட வர்கள் அழியட்டும்
நம் நாட்டில் நீதி இறவாத வரையில் வரையில் !

எழுதியவர் : கீர்த்தனா (20-May-15, 9:57 pm)
Tanglish : vidhya
பார்வை : 213

மேலே