கடலும் வானமும்

கடலும் வானமும்
--------------------------

தகவல். தகவல். தகவல். நாமும் ஒரு தகவல், நம்மைச் சுற்றி இருப்பவையும் தகவல். கடலும் ஒரு தகவல். வானமும் ஒரு தகவல். தகவல்களின் தெளிவு தான் வாழ்க்கையின் அழகு.

கடலின் தகவல் சுயத்தை இழக்காதே என்பதாகும். சூழல்களின் உள்ளீடுகள் எவையாக இருப்பினும் அவற்றைக் கடல் உள்வாங்கிக்கொள்ளும்,

ஆனால் சுயத்தை இழப்பதில்லை. காற்றின் மூலமும், நிலத்தில் இருந்து தன்னை அடையும் நீரின் மூலமும் செலுத்தப்படுபவையின் இயல்புக்கேற்ப தனது தன்மையை மாற்றிக்கொள்வதில்லை.

வானத்தின் தகவலானது தன்னை அழுக்காக்க முடியாது என்பதாகும். அழுக்காக்க முடியாத தூய்மை என்பதே வானம். வானத்தை எதுவுமே, எவருமே அழுக்காக்க முடியாது. வானத்தை அசுத்தப்படுத்த முயற்சித்தால் வானம் அதை ஏற்காததால் முயற்சிப்பவரே ஏற்பவராகிறார். தூய்மையான உள்ளம் அசுத்தப்படுத்தப்பட முடியாதது. யாராவது அசுத்தமாக்க முயற்சித்தால் முயற்சிப்பவர் அசுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

சூழல்கள் அசுத்தத்தைத் திணித்தாலும் சுயத்தை இழக்காமல் கடல் போன்று வாழ்வதா அல்லது அசுத்தத்தை ஏற்காத வானம்போல் வாழ்வதா? எதுவாயினும் சிறந்ததே.
-
நன்றியுடன் KG Master.
வாழ்க வளமுடன்

எழுதியவர் : KG Master (21-May-15, 7:43 am)
Tanglish : katalum vaanamum
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே