சந்தேகப்படு

சந்தேகப்படு
------------------

நண்பா!

நீண்ட நாட்களாக உன்னிடம் ஒரு உதவி கேட்கவேண்டும் என்றிருந்தேன்' என்றான் நன்பன்
'தாமதம் எதற்கு, உடனடியாகச் சொல்' என்றேன்
'கேட்டால் நீ சிரிப்பாய்' என்றான் நண்பன்
'சிரிக்கமாட்டேன் சொல்' என்றேன்


'சந்தேகம் ஒன்று என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது' என்றான் நண்பன்

சிரிப்பை அடக்குவதற்கு முடியுமானவரை முயற்சித்தேன். முடியவில்லை

'க, கா, கி, கீ, கு, கூ ஹி ஹீ' என வாய்க்கு வந்தபடி எல்லாம் சிரித்தேன்

'ஏன் சிரிக்கிறாய்?' என்றான் நண்பன்

'உன் சந்தேகத்தை வேறொருவர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறாய், அதனால் தான்' என்றேன்

'எனது சந்தேகத்தை நானாகத் தீர்க்க முடியுமாயின் எப்போதே தீர்த்திருப்பேனே' என்றான் நண்பன்

' உன்னால் மட்டும்தான் உன் சந்தேகத்தைத் தீர்க்க முடியும்' என்றேன்

'எப்படி? என்றான் நண்பன்

'ஒரேயொரு வழிதான் உண்டு. உன் சந்தேகம் தொலையும் வரை சந்தேகத்தைச் சந்தேகப்படு' என்றேன்

சிந்தனையில் இறங்கினான் நண்பன். சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் நான்.

+
எழுத்துருவாக்கம்
KG மாஸ்டர்
மீள் பதிவு
கே இனியவன்

எழுதியவர் : KG மாஸ்டர் (21-May-15, 7:45 am)
பார்வை : 56

மேலே