இதையும் வச்சுக்கோயேன்

என்ன தம்பி ..
ரசமா..
கூட்டு வைக்கட்டுமா..
..
சர்வரின் குரல்
காதுகளில் விழாமல்
இலையில்
இரண்டு சொட்டு கண்ணீர்
விழுந்ததும்
ஏறிட்டுப் பார்த்தவனுக்கு..
எதுவுமே தெரியவில்லை..
இன்னும் கொஞ்சம்தான்
வைக்கிறேனே என்று..
"இதையும் வச்சுக்கோயேன் "
என்று சொல்லி ...
தனக்கு வைத்திருந்த மீன் துண்டையும்
எடுத்து வைக்கும் தாயின் முகம்
தவிர..
ரெட்டியார் மெஸ்ஸின்
மங்கிய வெளிச்சத்தில் ..
வேறு எதுவுமே தெரியவில்லை
அவனுக்கு !