பெய்தன மழை

கருங்கூந்தலை அணைத்த மேகங்கள்
எங்கு காணினும் நாசியைப் பிளந்து...
என்ன நடக்கிறது?கமகமவென!
அறிந்தேன் உணா்ந்த வேகத்தில் .
வெளியே எட்டிப் பார்த்தேன் ஆஹா!

விண்ணின் பாமரன்
மண்ணுலகம் வந்தான்
பாவலனாக...

ஆனந்தத்தில் திளைத்த நான்
சிறகை விரித்து ஆடினேன்
வான்தேவதையாகி...

ஆனந்தம் மேலும் பொங்கிட
திடீரென அவனைக் காணாது
உணர்ந்தேன் ரசித்தேன் என்
சிறகுகளெல்லாம் படபடத்தன
அவன் டப்டப் இட்ட முத்தங்களால்....

அடடா! என்ன அதிசயம்?
ஆச்சா்யத்தில் துள்ளினேன்
மயில் போல!
மான் போல!
அவனோ!தொடா்ந்து நில்லாது
மடமடவென முத்தமழை பொழிந்தான்
என் மேனியில்....

வழிதோறும் ஓடினேன் அவனோடு
ஆறு மலை யென தடைகளைத் தளர்த்தி
பனிக்குடத்தை யுடைத்து மளமளவென
அர்ச்சித்துக்கொண்டே யிருந்தான்..

தாவரங்கள் மலர்கள் எல்லாம்
கண்கள் விரிய பளபளவென
தலையாட்டி மகிழ்ந்தன
பால் போல் உள்ளம் அவனுக்குத்தானென்று..

மலடுகளாகிப்போன மண்மடியில்
பதராகிப்போன பயிர்களுக்கும்
தலைநிமிரா விதைகளுக்கும்
தன் உயிரைப் பாலாக தேனாக
ஊட்டி மகிழ்கிறான் மழமழயென..!

செஞ்சோற்றுக்காரன் தன் உடலை சுர்ா்ரெனஇழுத்துக்கொண்டான்
கடமை முடிந்ததென
ஆதவனைக் கண்ட நொடியில்...

ஆறுகுளங்களில் நிரம்பி
ஏழைஏர்களின் பாதங்களில் பட்டு
வணங்கித்தொழுது விடைபெற்றான் விறுவிறுவென...

நானோ! மீண்டும் மயிலாகி
ஆனந்தத்தில் தோகைவிரித்துக்
கத்தினேன் சுற்றினேன் கலகலவென
சோலைவனமெங்கிலும்....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (21-May-15, 4:31 pm)
பார்வை : 382

சிறந்த கவிதைகள்

மேலே