வெளுக்க மறுக்கும் நிறங்கள்

தலைக்குள்
தாமிரத் துருவலா
வைத்திருக்கிறாய்...? களிமண்
கண்டிரா ஆசிரியர்
இப்படியாக திட்டிக் கொண்டிருப்பார்....

நகங்கள் காட்டிக்
காதலிக்கக் கேட்கக்கூடும்
அவன்...
நகங்களால் கீறி
மறுத்துப் போகக்கூடும்
அவள்....

அலாஸ்காவிலிருக்கும்
அப்பாவிடம்...பாரீசிலிருந்து
நான்....
இரவு வந்துவிடுவேன்...
என்ன சாப்பிட்டீர்கள் ..? இரண்டு
சரிவிகிதக் குளிகையும்..
ஒரு குவளை சத்துக் கொழுப்பும்....

நிலாவுக்குச் சுற்றுலா...
தொகுப்புக் கட்டணம்
இத்தனை டாலர்...
நிபந்தனைகளுட்பட்டது.........

இறந்து விட்டிருந்த
அம்மாவைப் பொசுக்கி
சாம்பல் கொடுத்திருந்த
ரோபோக்களின்
கைபற்றிக் கதறிக் கொண்டிருக்கிறான்
தாமதித்திருந்த... மகன்...!!

எழுதியவர் : நல்லை.சரவணா (22-May-15, 8:40 am)
பார்வை : 113

மேலே