முகமூடி

‪பல‬ நேரங்களில் சிரிக்காமல் சிரித்தும் ...
ரசிக்காமல் ரசித்தும் ...
காணமல் கண்டும் ...
பேசாமல் பேசியும் ...
பிடிக்காமல் பிடித்தும் ...
பொய்யாய் வாழ்ந்து ...
நமக்கு என்ன பிடிக்கும்
என்பது கூட புரியாமல்
தெரியாமல் அறியாமல் ...
அன்பு என்னும் மாயவலைக்குள்
புதையுண்டு போகிறோம் .............
‪நாம்‬ நாமாக இருக்க முடியாமல் ...
நம்மை நாமே தொலைந்தது விட்டு
அடுத்தவன் என்ன
நினைத்து விடுவனோ
என்று யோசித்து யோசித்து ...
காலம் கடத்துகிறோம் ....
நம் வாழ்கையில்
ஒரு நாலாவது நாமாக
நம் மனசாட்சிக்கு பயந்து
வாழ்ந்து தான் பார்ப்போமே ..................

எழுதியவர் : பிரபாகரன் (22-May-15, 2:05 pm)
சேர்த்தது : பிரபாகரன்
Tanglish : mugamoodi
பார்வை : 199

மேலே