வேர்களின் முட்கள்

உன் ஒப்பனை
கலையப்பட்ட‌
ஓர் நாளின்
நிசப்தத்தில்தான்!!

என்
படுக்கையறை
கண்ணாடிகள்
‍ஆரவாரித்து
கொண்டன!!

விம்பங்களில்
வடிந்து மிஞ்சிய
மேகக்கூட்டம்!
புறப்பட‌
தயாராகுகிறது!!

மீதமிருப்பதோடு
என் நகர்தலின்
இயலாமைகள்!
கைலாகு
செய்கின்றன...

உனக்கென‌
எழுதிமுடித்த‌
உயிர்க்கவிதையின்
முதல்
எழுத்திலிருந்து
உதிரத்தொடங்கிய!!

என் பேரவாக்களை
ஏகாந்தஇராவே
தின்றுத்தீர்க்க‌
ஆரம்பிக்கிறது!!

மீண்டும்
ஒருத்தியின்
வரவுக்கான‌
வாசல்களை
இரும்புகளாலும்
எரிபந்தங்களாலும்
நிரப்பிக்கொண்ட‌
என் உண்மைக்காதலை
எவர் கூறி
புரிவாய் நீ....

எழுதியவர் : புலவூரான் ரிஷி (22-May-15, 10:32 pm)
பார்வை : 112

மேலே