கலியுகத்தில் காதலே காமம்

காமம் வேட்கையும் காதலும்
ஒன்றாக கலந்து விட்டதால்
காதலின் புனித தன்மை
இழக்கப்பட்டு காமம் தலை
விரித்து ஆடிக் கொண்டு
இருக்கின்றது

கலியுகம் காதலை தான்
காமம் என்று புரிந்து கொண்டு
மன சாட்சியை இருளில்
மறைத்து விட்டு கால்
போன போக்கில் செல்லுகின்றது

விதி கூட வேடிக்கை
பார்த்து தோற்று விட்டது
எங்கும் வேதனை
ஒன்றே வேதவாக்கு
ஆனது

எழுதியவர் : துளசி (23-May-15, 12:47 pm)
பார்வை : 148

மேலே