காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள்
""""""""""""""""""""""""
வீட்டுக்குள்ளே
லேசான குளிர்காற்று!

மெட்டிச்சிரிப்பில்
குழந்தையின் குதூகலம்!

வரும் வழி எல்லாம்
இயற்கை மூலிகை வாசம்!

பாதங்கள் அணைத்த
மோகத்தில் ,
வாசல் ஓரம் பாதணிகள்!

நிலைக்கண்ணாடியில்
ஒட்டிய பொட்டில் மூன்றாம் பிறை
ஒளி வீச்சு!

குளியல் முடித்து,
கூந்தல் அசைவு,
மலைச்சாரல்!

இவை எல்லாம்,
உனது வருகைக்கான,
முன்ணோடிகள்""
எனது காத்திருப்புக்கள்!

லாஷிகா
"""""""""""

எழுதியவர் : லவன் கேர்ணிங் டென்மார்க் (23-May-15, 11:59 am)
Tanglish : kaaththiruppukkal
பார்வை : 109

மேலே