உன் வாழ்வும் உன் பயணமும்-ரகு

எதன் தேடலில்
லயித்துப் போகிறாய் மனிதா
மன்னிக்க
வியர்த்துப் போகிறாய்

கனவுத் தேடலா
கண்கள் திற
கவிதைத் தேடலா
தனித்துப் போ
பணத் தேடலா
மெய்யாய் உழை
பதவித் தேடலா
பொய்யாய் உழை

எதன் பொருட்டு
சோர்வடைகிறாய் மனிதா

இன்பம் நுகர
ஏழையர்க் குதவு
துன்பம் அகல
தோல்விகள் உணர்
காற்றில் எழுது
கனவின் சுகம்
நேற்றைக் கொல்
நாளையைத் தள்
சிறகுகள் விரி
இன்று நிஜம்

காரணமின்றியா
கருவில் துளிர்த்தாய் மனிதா
வாழ்வது வரம்
வாழ்ந்து உணர்

தாழ்வும் தவிப்பும்
தீர்கையில் புரியும்
வெறுமையும் வளமும்
சேர்கையில் தெளியும்
கற்றது கொஞ்சம்
கற்க நட
கடைசி காலத்தில்
கல்லறை செய்

எழுச்சி பழக
வீழ்ச்சி பயில்
சொல்லில் தெளி
செயலில் முனை
பறித்தும் பூக்களில்
மலர்ச்சி பார்
விழும் அழகை
மழையில் ரசி

விழிகள் திற மனிதா
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் வாழ்வும்
உன் பயணமும்......!!

எழுதியவர் : சுஜய் ரகு (24-May-15, 7:49 pm)
பார்வை : 231

மேலே