தாசி
இரா மலரும் முல்லை
மகளோ இவள்
காலையில் கசங்கி கண்ணீரில்
முகம் நனைக்கிறாள்
இரைப்பையின் இரைச்சல்
தாங்க பொறுக்காது
இச்சை தணிக்க
இசைந்தாளோ இவள்
வசை பாட பாத்திரமானவள்
கண்களாலே துகில்
உரித்தாலும்
மானத்தை உடையாய்
தைத்திருப்பாள்
கடன் சேலையை
கந்தையாக்கா விடில்
கண்ணகியாய் வாழ
ஏங்கி தவிக்கிறாள்
வறுமையின் வழுவழுப்பில்
கணிகையாய் வழுக்கி விழுந்தவள்
ஊரே தள்ளி நின்று
பல்லை காட்டி சிரிக்க
கவலை கட்டிக் கொண்டு
முத்தமிட்டது கன்னத்தில்