எதிர் மறைகள்

கோபுரம் போதும்
சிலைகளைப் பதுக்கிவிடு

தேசங்கள் கைகொள்
மக்களை கைவிடு

மொழிகள் காத்திடு
பேச்சுக்குத் தீயிடு

கவிதைக்கு விருது
கவிஞனுக்குப் பசி

அரண்மனை அவசியம்
வரலாற்றை மறைத்திடு

கல்விச்சாலை உண்டாக்கு
கற்பதை மறந்திடு

அரசாங்கத்திற்கு சிலை
சட்டத்திற்குக் கல்லறை

கட்டடங்கள் முக்கியம்
பயிர்களை அழித்திடு

பழங்களைப் பறித்திடு
வேர்களுக்கு விசமிடு

சிறைச்சாலைகள் உருவாக்கு
சட்டத்தைக் கொளுத்திடு

மிருகங்களை வதை செய்
கடவுளைக் கொண்டாடு

பசியை மறந்திடு
கணினி பார்த்துண்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-May-15, 7:36 am)
Tanglish : ethir maraikal
பார்வை : 323

மேலே