புத்தக மூட்டையும் புதுக்கணினியும் -

புத்தக மூட்டையே போதும், புலம்பாதே!
வித்தகத் தார்க்கிது வீணாமே! – மெத்த
இடம்பிடித்தாய் பின்னோருக் கில்லாது செய்தாய்!
முடங்கிவிட்டாய் மூட்டையாய் மேல்!

சீற்றம் எனக்கில்லை சேர்த்தெடுத்துக் கண்சாய்க்க
ஏற்ற சமயம் எதிர்பார்ப்பேன் – தோற்றம்
மறைத்தபடி மூட்டையாய் மாறியதேன்? கண்ணை
நிறைத்தல மாரிவந்து நில்!

கணினி ஒளித்திரையில், காண்பேன் உனையே
அணித்தே ஒருசொடுக்கில் ஆட; -பணித்தால்
விரைந்தென் விருப்பம் வெகு,நேர்த்தி யாக
வருந்தா வகை,காட்டு மாம் !

எல்லாம் தனக்கென்றே எண்ணாதே பின்வருவார்
நல்லாம் வழி,நிற்க நாடுவாய்! – வல்லான்
கணினிபோல் சேர்ந்து கடிதாற்றி நிற்கும்
பணி,நிமிர்ந்து நின்றுயரப் பார்!

(இக்கவிதையை எழுதத் தூண்டுகோலாய் இருந்த சியாமளா ராஜசேகருக்கு எனது நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்)

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (25-May-15, 1:25 pm)
பார்வை : 106

மேலே