அங்குல உயரங்கள்
இடமும் வலமுமாய்
இதயம் வைத்தபடி
இணைந்த நம் உடலுக்குள்
இதழ்வழியே உயிர் பரிமாற்றம்
ஒன்றுமட்டும் நிகழுதடி
உன்னிடமாய் சாய்ந்தபடி
உன் ஓரக்கழுத்தினில் நானிட்ட
ஏதோ ஒரு முத்தமொன்றில் - நீ
தொடங்கி வைத்த மூச்சுக்காற்றும்
காதினில் தொனிக்குதடி
மொத்த முத்தங்களையும்
முயன்று பெற்றுக் கொள்ள
என்னிடமாய் சாய்ந்தபடி - அங்குல
உயரங்கள் எழுந்தாயடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
