அவள்
அவள்
""""""""""
மதிய வெயிலில் என்னை
கடந்த குளிர் நிலவு!
பனி முகட்டில்
விறகு உண்ணும்
தீ வேப்பம்!
அடை மழையில்
தலை துவட்டிதேனீர்
பருக்கும் கைகள்!
புயல் காற்றில்
நடுநிசி பிரசவித்த
அமைதி!
குற்றக்கூண்டில்
ஒரு முறை நான்,
எனக்காக பேசிய
பஞ்சவர்ணக்கிளி!
மதி மயங்கி
மரணம் அழைத்த வேளை,
தோழ் தந்து
என்னை முகர்ந்த அன்னை!
நித்திரை முறிந்த
நீண்ட இரவில்""
என் உடல் வருடி
உணர்வு சுவைத்தவள்,
என் கனவுத்தாரம்!!!
லாஷிகா
""""""""""""""