மலைகள்

அடர்ந்த..உயர்ந்த
நீல மலையினைக் காண்கிறேன்..
அதன் மௌனமும்..அழகும்..
ஆளுமையும் காண்கிறேன்..

அதன் உள்ளே மறைந்திருக்கும்
வலிகள்..பற்றி
அது சொல்வதில்லை..
தவ யோகியின் சிரத்தையுடன்
நிற்கும் மலை போல்
மனிதர்களும் உண்டு..

பள்ளத்தாக்குகளுக்கு ..
முன்னாலும் பின்னாலும்
இருக்கும் இந்த மலைகள் போல்..
சில ..
மனிதர்களும் உண்டு!
இந்த மலைகள் மேல்
எச்சமிட்டு ..பெருமிதமாய்
பறக்கும் காகங்களும் உண்டு..

என்றாலும்..
மலைகள்..
மலைகள்தான் !

எழுதியவர் : கருணா (27-May-15, 9:35 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : malaikal
பார்வை : 383

மேலே