மனதைத் தொட்ட கவிதை உன் கொலுசின் ஓசை பார்கவி

என்னை கடந்துபோன
இறைசல்களுக்கு மத்தியில்
மனதுக்குள் வந்து மணியடித்து விட்டுப் போனது
உன் கொலுசின் ஓசை மட்டுமே
‍‍‍....பார்கவி
உன் கொலுசின் ஒலி என்ற பார்கவியின் கவிதையில் நான் ரசித்த இனிமையான வரிகள்.எத்தனையோ பெண்கள் பார்த்துப் போய்விட்டார்கள்.
பார்த்த இவளோ மறுத்து விடுகிறாள்.அந்த உணர்வின் வலி கொலுசொலியாக
வெளிப்படுகிறது

கவிதையின் சாராம்சம் எனது குறட்பா வடிவில் :

கொவ்வை இதழே மறுத்தாய் இரைச்சலிலும்
நெஞ்சில் கொலுசின் ஒலி

மனதை தொட்ட கவிதைகளைப் பற்றி இப்பகுதியில் சொல்லலாம் என்று
இருக்கிறேன்
நோக்கம் : இவர்கள் குன்றிலிட்ட விளக்காக ஒளிரவேண்டும்.இங்கே
இனிய ஆரோக்கிய இலக்கிய உணர்வு உறவு வளர வேண்டும்
இளயவயதின்ர் அதிலும் புதிதாக இணைன்ந்தவர்களின் கவிதைகளே
பெரும்பாலும் இருக்கும். மேலும் இது பற்றி சொல்கிறேன்
‍‍‍....அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-May-15, 10:11 am)
பார்வை : 195

மேலே