ஒரு வழிச் சாலை
நீதி நேர்மை நியாயம்
போதிக்குது கல்வி பாடச்சாலையிலே!
கற்றிட விரும்பும் மாணவரை சேர்த்திட
நீதியின்றி நிதி கேட்குது நிறுவனமே!
உண்மை உழைப்பு உயர்வு!
தினம் மேடையில் பேசும் தொழிற்தசங்கதலைவா!
நீயும் உயர்ந்தது உழைப்பாளா?
உண்மையை சொல்வதில்லையே!
உடல் மண்ணுக்கு !உயிர்தமிழுக்கு!
தினம் தினம் சொல்லியே அரசாளும் எம்தலைவா!
பிள்ளைகள் பேரபிள்ளையை எந்தபள்ளியில்
சேர்க்கிறாய் உண்மையை சொல்லலாமே!
நாடோடி வாழவந்தோரை
ஓடோடி வந்தே வாழ்விக்கும் எம்தமிழே!
தன்மானம் என்றால் தெரியாதா உனக்கு!
நீ செல்லும் பாதையென்றும் ஒருவழி பாதையன்றோ!!