கௌசல்யா -ஒரு தொடர்கதை பகுதி -2

திருமணத்திற்காக நாங்கள் எங்கள் பெற்றோரை நாடினோம் .அவர்கள் எங்களை ஏற்க மறுத்தனர் .
என்னசெய்வதென்று தெரியாது தவித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு யோசனை ,நான்
கௌசல்யாவிடம் கேட்டேன் .நாம் ப்ர்திவு திருமணம் செய்து கொண்டால் என்ன என்று
அதற்கு கௌசல்யாவும் சம்மதம் தெரிவிக்க நாங்கள் சார்பதிவாளர் அலுவலகம் சென்று திருமணம்
செய்ய முடிவு எடுத்தோம் .
பொழுதும் கழிந்தது இரவும் விடிந்தது கதிரவன் மேல் எழுந்தான் . இருவரும் சார்பதிவாளர்
அலுவலகம் சென்றோம் .நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்தோம் .பின்
திருப்பதி செல்வதாக முடிவெடுத்தோம் .திருப்பதி சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த
கோர சம்பவம் நிகழ்ந்தது .நாகங்கள் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி விபத்துக்குள்
ஆனது பலர் உயிர் இழந்தனர் .எனக்கோ பலத்த அடி கை ,கால் நடக்க முடியவில்லை.வலியின்
வேதனையில் நான் மயக்கமானேன் .அந்த பகுதி மக்கள் காயமடைந்த நபரை மருத்துவமனையில்
சேர்த்தனர் .
மருத்துவமனையில் நான் ஒரு வாரத்திற்கு பிறகே !கண்விழித்தேன் ஏன் நண்பர்களும்
பெற்றோரும் என்னுடன் இருந்தனர் .எனைப்பார்த்து வேதனையில் இருந்தனர் .என் அம்மா
அழுது கொண்டிருந்தார்கள் .அழாதே !என்று ஆறுதல் சொன்னேன் .
என் நண்பர்களிடம் பேச வேண்டும் என்றேன் .என்னை அவர்கள் வெளியே அழைத்து சென்றனர் .
அவர்களிடம் கௌசல்யாவை பற்றி கேட்டேன் .அதற்கு அவர்கள் கௌசல்யாவை பற்றி ஒரு
செய்தியும் தெரியவில்லை என்றனர் .என் தந்தை வரும் சத்தம் கேட்டது .
மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு சென்றோம் .காலங்கள் உருண்டோடின .நான் பழைய
நிலைக்கு திரும்பினேன் .என்னால் கௌசல்யாவை மறக்க முடியவில்லை . அவளைத்தேடி
அலைந்தேன் .இதை அறிந்த என் தந்தை எனக்கு திருமணம் செய்வதென்று முடிவு செய்தார்.
எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர் .எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றேன் .
என்னை கட்டாயப்படுத்தினர் .வேறு வழி இன்றி சம்மதித்தேன் .
திருமணம் முடிந்தது .ஓரிரு நாட்களில் கௌசல்யா இறந்து விட்டால் என்ற செய்தி கேட்டது .
என் தந்தையே அதை என்னிடம் சொன்னார் .என் தந்தை அவளை மறந்து இவளுடன் நீ வாழ
வேண்டும் என்றார் .
ஒரு வருடம் கழிந்தது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது ....
இருவரும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தோம் .
ஒரு நாள் காலை நான் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது என் வாழ்வில்
அந்த புயல் வீசியது ...............(தொடரும் )

எழுதியவர் : சு .முத்து ராஜ குமார் (27-May-15, 6:08 pm)
பார்வை : 248

மேலே