கூடிக் கழிந்த பின்

அறையெங்கும்
அப்பிக்கொண்ட இருள்
அவள் முகப்பொழிவை
மட்டும் அணைக்க முடியவில்லை..

அதனால் அனைத்தேன்
நான் அவளை
வெட்கத்தில் அவள் மிரள
ஏக்கத்தில் நான் தடுமாற..

இருவரும் வேறொரு
பாதைக்கு தடம் மாற
இது காதலா?? காமமா???
புரியாத புதிரானது

என் விரல் கொண்டு
நான் அவளை மீட்ட
என் செவியோரம்
அவள் இசை பாட

உணர்ச்சி வெள்ளம்
பெருக்கெடுக்க
நகரிகமெனும் அணை
உடைந்து நொருங்க

அடைகளெல்லாம்
சிதறிப்போக
அசைகள் மட்டும்
நிறைந்திருக்க

முன்னிரவில் ஒருமுறையும்
பின்னிரவில் ஒருமுறையும்
கூடிக் கழிந்த பின்
கூடுவது என்னவோ
அவளின் காதல் மட்டுமே..

எழுதியவர் : கோபி (27-May-15, 11:18 pm)
Tanglish : kootic kalindha pin
பார்வை : 124

மேலே